அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அமைந்திருக்கும் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் லாரி ஒன்று நுழைந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு தடுப்பு மீது லாரி இரண்டு முறை மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லாரியை ஓட்டி வந்த நபரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ஹிட்லரின் நஜிப் கொடியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா (வயது 19). இவர் ஜெயிண்ட் லூயிஸ் புறநகர் பகுதியில் உள்ள மிசூரியில் உள்ள செஸ்டர்பீல்டு என்ற இடத்தைச் சேர்ந்தவர். லாரியை வாடகைக்கு எடுத்து வந்து வெள்ளை மாளிகையின் தடுப்புகளைத் தாக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வந்ததாகவும், தனது வழியில் யாரும் குறுக்கே வந்தாலும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவேன். கடந்த 6 மாதங்களாக ஜோ பைடனை கொலை செய்யத் திட்டமிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரின் வாக்குமூலத்தைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு பிரிவின் கீழ் போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகிறது.