Skip to main content

கலர்ஃபுல் போஸ்டருடன் வெளியான ‘ஜனநாயகன்’ பட புது அப்டேட்

Published on 24/03/2025 | Edited on 24/03/2025
jana nayagan new release date

வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

கடந்த அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 

இப்படம் வருகிற அக்டோபரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகவுள்ளதாக ஒரு தகவல் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது. அதன் படி இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புது போஸ்டருடன் அறிவித்துள்ளது. இதன் மூலம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் விஜய்யின் 14வது படம் இப்படமாகும். ஏற்கனவே கோயம்புத்தூர் மாப்பிள்ளை, காலமெல்லாம் காத்திருப்பேன், கண்ணுக்குள் நிலவு, திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வில்லு, காவலன், நண்பன், ஜில்லா, பைரவா, மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வெளியானது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்