
பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது ஆகும். அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டது.
அதே சமயம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்திற்கு உட்பட்டது கேசம்பட்டி. இந்த பகுதியில் 32 வகை பறவையினங்கள், 26 வகை வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் தேவாங்கு உள்ளிட்ட பல்லுயிர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கேசம்பட்டியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவைத் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் கேசம்பட்டி தமிழகத்தின் 2வது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.