ஜெர்மனியை சேர்ந்த 65 வயது முதியவர் எபெர்கோல்டு. படித்தவரான இவர் கணிணிதுறையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகு அதில் வந்த பணத்தை கொண்டு பல நாடுகளுக்கு இவர் சுற்றுலா சென்றுள்ளார். கையில் இருந்த பணம் தீர்ந்துவிடவே சாப்பிட கஷ்டப்பட்டுள்ளார். சிறுசிறு வேலைகளில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு காலத்தை கழித்து வந்தவருக்கு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ செலவுக்காக தங்கியிருந்த வீட்டையும் விற்றுள்ளார்.
இதனால் தங்குவதற்கு இடமில்லாது தவித்த அவர், தன்னுடைய காரையே வீடாக மாற்றி சுற்றிவந்துள்ளார். எதிர்பாராத விதமாக அவருடைய ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விடவே அவர் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துள்ளார். இந்நிலையில் ஜெயிலுக்கு சென்றால் சாப்பாட்டுக்கு பிரச்சனை இருக்காது என்று நினைத்த அவர், சைக்கிள் செல்லும் பாதையில் தன்னுடைய வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். ஆனால் எதிர்பாரதவிதமாக எதிரே சிறுவன் ஒருவன் குறுக்கே வர, சிறுவன் சாலையின் ஓரத்தில் தூக்கிவீசப்பட்டு இறந்தார். தற்காலிகமாக ஜெயிலுக்கு போகலாம் என்று நினைத்த அந்த முதியவருக்கு நீதிமன்றம் தற்போது ஆயுள்தண்டனை விதித்துள்ளது.