Skip to main content

இலங்கை வீதிகளில் துப்பாக்கிகளுடன் ராணுவத்தினர்... கோத்தபய ராஜபக்சே அறிக்கை...

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. அதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த திங்கள்கிழமை அந்நாட்டின் 7-வது அதிபராக பதவி ஏற்றார். அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.

 

military rounds in 22 tamil areas

 

 

இதனையடுத்து இலங்கைக்கான இடைக்கால அமைச்சரவையை நியமித்து கோத்தபய ராஜபக்ச, அவரின் சகோதரர்களுக்கு முக்கியப் பொறுப்புகளில் இடமும் கொடுத்தார். இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் ராணுவத்தினர் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளார் கோத்தபய ராஜபக்சே. பொது அமைதியைப் பேணுவதற்காக 2019, நவம்பர் மாதம் 22 ஆம் தேதியிலிருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் உட்பட 22 மாவட்டங்களில் இலங்கை ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்