Published on 28/01/2019 | Edited on 28/01/2019
யூடியூப் இனி பொய்யான செய்தி குறிப்புகளை ஊக்குவிக்காது என்று அந்நிறுவனத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் கிளையான யூடியூப், இனி பொய் அல்லது தவறு என்று உறுதி செய்யப்பட்ட வீடியோக்களை ஊக்குவிக்க மாட்டோம் என்றும் அதேசமயம் வாடிக்கையாளர்கள் தேவை இல்லை என்று பரிந்துரைக்கும் வீடியோக்களும் அவர்களுக்கு அளிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதே நடவடிக்கையை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.