Skip to main content

மைக்கெல் ஜாக்சன் தந்தை உயிரிழந்தார் !!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
JAC

 

 

 

உலகபுகழ் பெற்ற இசை ஜாம்பவானாகவும் நடனத்தின் புகழ் குறியீடாகவும் இருந்தவர் மைக்கெல் ஜாக்சன். கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அதிக மயக்க மருந்துகள் எடுத்துக்கொண்டதால் மைக்கெல் ஜாக்சன் உயிரிழந்தார். தற்போது அவரது தந்தை ஜோ ஜாக்சன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.அவருக்கு வயது 89.

 

 

 

அண்மையில் லாஸ்வேகாஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்திருந்த ஜோ ஜாக்சன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 1965-ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய ஜாக்சன் பிரதர்ஸ் என்ற இசைக்குழு மூலம் இவரது மகனான மைக்கெல் ஜாக்சன் தனது இசை பயணத்தை ஆரம்பித்தார். அதேபோல் அந்த இசைக்குழுவிற்கு ஜான்சன் 5 என்றும் மைக்கெல் ஜாக்சன் 1966-ஆம் ஆண்டு பெயர் மாற்றினார்.

 

அவரது தந்தை ஜோ ஜாக்சன் ஆரம்பித்த அந்த இசைக்குழுவே மைக்கெல் ஜாக்சனின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணமானது. இப்படி மைக்கெல் ஜாக்சனின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அவரது தந்தை ஜோ ஜாக்சன் மறைவு மைக்கெல் ஜாக்சன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்