நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன், நிலநடுக்கத்தையும் பொருட்படுத்தாமல் நேரலையில் பேட்டியளித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக நிலநடுக்கம் ஏற்படும் போது மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி விரைவது, பதற்றமடைவது ஆகியவை இயல்பானவையே. ஆனால் இதற்கு விதிவிலக்காக மாறியுள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன். இன்று, கரோனா வைரஸ் குறித்து ஊடகம் ஒன்றின் கேள்விக்கு நேரலையில் பதிலளித்து வந்தார் ஜெஸிந்தா, அப்போது திடீரென 5.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் நியூசிலாந்து நாட்டை தாக்கியது. இதன் காரணமாகப் பிரதமர் ஜெஸிந்தா இருந்த பகுதியில் கட்டிடங்கள் மற்றும் பொருட்கள் குலுங்கின. ஆனால், இதனால் பதற்றமடையாத ஜெஸிந்தா, ஊடகத்தின் கேள்விக்குத் தொடர்ந்து பதிலளித்து அந்த நேரலையை முடித்தார். அவர் இப்படி நிலநடுக்கத்திற்கு மத்தியில் பதட்டமில்லாமல் பேட்டியைத் தொடர்ந்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"We're just having a bit of an earthquake here": New Zealand Prime Minister Jacinda Ardern barely skipped a beat when a quake struck during a live TV interview. https://t.co/tKLFX9Kn5a pic.twitter.com/n97xbTGaRu
— ABC News (@ABC) May 25, 2020