
சீன நாடு மற்ற எல்லா நாடுகளை காட்டிலும் சற்று வித்தியாசத்தை கடைபிடிப்பது வாடிக்கை. உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட சிலவற்றில் மற்ற நாடுகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட உணவை அவர்கள் உட்கொள்வார்கள். குழந்தை பிறப்பை பதவி செய்ய டிஎன்ஏ பரிசோதனை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்று ஒரு பெண் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதனால் அவரின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.
ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள்கூட நிலைக்கவில்லை. பிறந்த குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதற்காக அந்த குழந்தைகளின் டிஎன்ஏ-வை மருத்துவர்கள் சோதனை செய்துள்ளார்கள். அதில் ஒரு குழந்தையின் டிஎன்ஏ-வும் அந்த பெண்ணுடைய கணவரின் டிஎன்ஏவும் ஒத்து போய் உள்ளது. ஆனால் மற்றொரு குழந்தையின் டிஎன்ஏ தந்தையின் டிஎன்ஏவில் இருந்து முழுவதும் மாறுபட்ட இருந்துள்ளது. இதனால் அந்த குழந்தையின் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் அம்மாவுக்கு வேறு ஒரு பழக்கம் மூலம் மற்றொரு குழந்தை பிறந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.