Skip to main content

"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019


அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, பொருளாதாரத் துறையில் மேற்கொண்ட பணிகளுக்காக, கடந்த வாரம் நோபல் பரிசு வென்றிருக்கிறார். இந்நிலையில், இவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, விமர்சித்திருந்தார். மேலும், டெல்லியில் உள்ள ஜேஎன்யூ கல்வி நிறுவனத்தில் படித்தபோது எனது சக போட்டியாளராக நிர்மலா சீதாராமன் இருந்தார். எனினும், எங்களுக்குள் ஆழ்ந்த நட்புறவு எதுவும் இருந்தது கிடையாது. 



நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரம் சீரழிவுப் பாதையில் உள்ளதை இதுவரை ஒப்புக் கொள்ளாமல் இருப்பது வியப்பாக உள்ளது. இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதைவிட பேரதிர்ச்சியாக உள்ளது. இதனை உணராமல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருப்பது, அவர் என்னுடன் படித்தவர்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும அபிஜித் பானர்ஜி விமர்சித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்