Published on 07/11/2020 | Edited on 07/11/2020

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடன் வெற்றி பெற்றதாகப் பெரும்பாலான பன்னாட்டு ஊடகங்கள் அறிவித்துவிட்டன.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக துணை அதிபராகப் போட்டியிட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வென்றுள்ளார். 270 வாக்குகள் பெற்றால் வெற்றி என்ற நிலையில், 284 வாக்குகளைப் பெற்று, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே அவர் 264 வாக்குகள் பெற்று இருந்த நிலையில், பென்சில்வேனியாவில் 20 வாக்குகளைப் பெற்றார். 1990-க்குப் பிறகு அமெரிக்காவில் ஆளும்கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறது.