Published on 26/08/2021 | Edited on 26/08/2021

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதேபோல் ஆப்கானிஸ்தான் மக்களும் தலிபான்களுக்கு பயந்து, தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதேபோல் ஆப்கான் பெண்களின் உரிமைகளும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையத்தின் அருகே திடீரென குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் குண்டுவெடிப்பு சம்பவத்தை உறுதி செய்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை என அறிவித்துள்ளது.