உலகின் மிகப்பெரிய பணக்கார நிறுவனமான அமேசான் ஒரு மணி நேரத்திற்கு 29.0 மில்லியன் டாலரை வருமானமாக ஈட்டுகிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்த பட்டியலில் அமேசான் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் ஒரு மணிநேரத்தில் சுமார் 208 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மணிக்கு 24.6 மில்லியன் டாலர் (176கோடி ரூபாய்) வருமானத்தை பெறுகிறது.
இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் கூகுள் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ஒரு மணிநேரத்திற்கு 127 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு மணிநேரத்திற்கு 110 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. அதேபோல ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு மணிநேரத்திற்கு 55 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ஒரு மணி நேரத்தில் 16 கோடி ரூபாய் வருமானமாக சேர்க்கிறது.