Skip to main content

சீனாவில் சுரங்கப்பாதை அமைக்கும் போது விபத்து

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

சீனாவின் லிங்காங் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்கான கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கப்பாதைக்கு மேலே இருந்த மண் குவியல் திடீரென சரிந்தது. இதில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. 14 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
 

h

 


விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். எனினும் 5 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. ஒரே ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இடிபாடுகளுக்குள் இன்னும் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. நவீன கருவிகளின் உதவியோடு அவர்களை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்