Skip to main content

கஸ்டமர் கேருக்கு 23 ஆயிரம் முறை போன் செய்து டார்ச்சர் கொடுத்த முதியவர் கைது!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

ஜப்பானைச் சேர்ந்தவர் ஒஹாமோடோ என்ற 70 வயது முதியவர் அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்.  தற்போது பென்சன் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர் கஸ்டமர் கேர் நம்பருக்கு 24 ஆயிரம் முறை கால் செய்து பீதியை ஏற்படுத்திய சம்பவம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த கேடிடிஐ என்ற நிறுவனத்தின் சிம்கார்டை பயன்படுத்தி வரும் இவர் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் ஒரே வாரத்தில் 411 முறை இவரிடம் இருந்து போன் வந்துள்ளது. போனில் இவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சந்தேகத்தைக் கேட்பார். பல சமயம் ஏற்கனவே கேட்ட சந்தேகங்களையும் கேட்பார்.



ஒரு வாரமாக கஸ்டர்மர் கேருக்கு இப்படி ஒருவர் போன் செய்து டார்ச்சர் செய்வதை அங்கு பணியாற்றியவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து மேலிடத்திடம் கஸ்டமர் கேர் ஊழியர்கள் புகார் அளித்தனர். அவர்கள் வந்து குறிப்பிட்ட நம்பரிலிருந்து எத்தனை முறை கால் வந்துள்ளது எனச் சோதித்த போது சராசரியாக ஒரு நாளுக்கு 33 முறை அந்த நம்பரிலிருந்து வாடிக்கையாளர் கேருக்கு போன் வந்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் இதுவரை அவர் எத்தனை முறை போன் செய்துள்ளார் என லிஸ்ட் எடுத்துப் பார்த்த போது அவர் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 23 ஆயிரம் முறை கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்துள்ளது தெரியவந்தது.

 

சார்ந்த செய்திகள்