Published on 30/10/2019 | Edited on 30/10/2019
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நினைவைப் போற்றும் வகையில் நவம்பர் 9- ஆம் தேதி சிறப்பு நாணயம் வெளியிடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். அந்த நாணயத்தின் படத்தையும் அவர் வெளியிட்டார்.
குருநானக் பிறந்த இடமான ஸ்ரீநன்கானா சாகிப் பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள கர்தாபூரில் தான் குருநானக்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கர்தாபூருக்கு ஏராளமான சீக்கியர்கள் வருவார்கள் என்பதால் 80 விசா கவுண்டர்களை ஏற்படுத்தி இருக்கிறது. விசா இல்லாமல் தர்பார் சாகிஹ் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் வந்து செல்ல ஒரு உடன்பாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளன. தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் இந்த குருத்வாராவுக்கு வந்துசெல்ல இந்த உடன்பாடு வகைசெய்கிறது.