லோகோ மாற்றம், புதிய திரை வண்ணம் என ஃபேஸ்புக் நிறுவனம், மெஸஞ்சரின் அசத்தலான கண்கவர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
பிரபல ஃபேஸ்புக் நிறுவனமானது பயனாளர்கள் உரையாடும் வசதியை எளிமைப்படுத்தும் விதமாக மெஸஞ்சர் சேவையை தனி செயலியாக அறிமுகப்படுத்தியது. அதன்பின், பயனாளர்களுக்குத் தொடர்ந்து சிறந்த அனுபவங்களைக் கொடுக்கும் வகையில் புதிய புதிய அப்டேட்ஸ்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது லோகோ மாற்றம், புதிய திரை வண்ணம் எனப் புதிய அப்டேட்ஸை வெளியிட்டுள்ளது. மேலும், செல்ஃபி ஸ்டிக்கர், குறிப்பிட்ட சாட்களை மறைக்கும் வசதி (வேனிஷ் மோட்), இன்ஸ்டாகிராம் பயனாளர்களைத் தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கடந்த மாதம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையும் வகையில் புதிய அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஃபேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக இன்ஸ்டாகிராம் பயனாளர்களையும், இன்ஸ்டாகிராம் மூலம் ஃபேஸ்புக் மெஸஞ்சர் பயனாளர்களையும் தொடர்பு கொள்ள முடியும். இவ்வசதியானது, முதற்கட்டமாக வட அமெரிக்க பயனாளர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.