சீனாவில் கோரோனா வைரஸ் பீதி உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இளம்பெண் ஒருவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கோரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. வௌவால்கள் மற்றும் கோழியின் கழிவுகளில் இருந்து இந்த வைரஸ் உற்பத்தி ஆவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
A bat(-eating) woman from China... pic.twitter.com/D8JNvClxy4
— Byron Wan (@Byron_Wan) January 23, 2020
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் இளம்பெண் ஒருவர் வௌவால் கறியை மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். கோரோனா வைரஸ் அதில் இருந்து உற்பத்தி ஆகின்றது என்று கூறியும், சீனர்களில் குறிப்பிட்ட சிலர் அதனை விரும்பி தொடர்ந்து சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டு அரசு செய்வதறியாமல் திணறி வருகின்றது. அந்த பெண் வௌவாலை ருசித்து சாப்பிடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.