அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து அவருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தது. இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்தார். தொடர்ந்து ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால் பரபரப்பு உண்டானது.
இந்நிலையில் நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் லோயர் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்ட் டிரம்ப், நீதிமன்றத்திற்கு வெளியே நின்று இருந்த ஆதரவாளர்களிடம் கையசைத்து விட்டு ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலின் போது பணப்பரிமாற்ற விதிகளை மீறி பணம் வழங்கிய குற்றச்சாட்டில் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தண்டனை பெற்று சிறையிலிருந்தாலும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.