Published on 19/12/2018 | Edited on 19/12/2018
பிரிட்டனின் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது ஆடம் தாமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படஸ் நாஜி தத்துவங்கள் மீது நம்பிக்கை கொண்டு அதனை செயல்படுத்த முனையும் நாஜி பற்றாளர்கள் ஆவர். இந்த தம்பதிகள் தங்களுக்கு பிறந்த குழந்தையின் பெயரின் நடுவில், ஹிட்லரை போற்றும் வகையில் அவரது பெயர் வரும்படி, பெயர் சூட்டியுள்ளனர். இதனை எதிர்த்து அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தந்தையான தாமஸுக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனையும், தாய் க்ளவுடியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி தீர்ப்பளித்த நீதிபதி கூறுகையில், இவ்விருவரும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகளை வளர்ப்பது போன்ற செயலில் ஈடுபட்டதால் இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.