ஆன்லைன் வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் அமேசான். இந்த நிறுவனத்தில் பொருட்களை பேக்கிங் செய்ய ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைவாய்ப்பு பெற்று வரும் நிலையில் அந்நிறுவனத்தில் பேக்கிங் செய்வதற்கு ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளன.
இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊழியர்களிடம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். அதன்படி அமேசான் பொருட்களை வேகமாக டெலிவரி செய்யும் ஷாப்பர் மையங்கள் அமைத்து கொடுத்து சுயதொழிலுக்கு உதவுவதாகவும். இதற்கு விருப்பமுள்ளவர்களுக்கு 10000 டாலர்கள் (இந்திய மதிப்பில் 7 லட்ச ரூபாய்) வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் இதற்கு ஒப்புக் கொண்டால் 3 மாத சம்பளமும் தருவதாக கூறியுள்ளது. ஒரு பேக்கிங் இயந்திரம் அமைக்க இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது மனிதர்களை விட 5 மடங்கு வேகமாக வேலை பார்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.