Published on 24/09/2021 | Edited on 24/09/2021

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அமெரிக்க நடிகை ஒருவரின் தலைமுடியில் தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்க நடிகை நிக்கோல் ரிச்சியின் பிறந்த தினம் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. பிறந்தநாளன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் நிறைந்திருந்த அவர், நண்பர்களின் வாழ்த்துகளுக்கு இடையே கேக் வெட்டுவதற்காக கீழே குனிந்துள்ளார். கேக் வெட்டும் மகிழ்ச்சியில் அருகிலிருந்த மெழுகுவர்த்தியை அவர் பார்க்கவில்லை.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த மெழுகுவர்த்தியில் அவரின் தலைமுடி படவே, நொடிப்பொழுதில் தலைமுடி பற்றிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்த அவரை, அருகில் இருந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர். இதில் பெரிய அளவிலான சேதம் ஏற்படும் முன் அவர் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.