Published on 04/01/2020 | Edited on 06/01/2020
புத்தாண்டு தினத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2020ம் ஆண்டு துவக்க நாளான ஜனவரி முதல் தேதி மட்டும் இந்தியாவில் 3,92,078 குழந்தைகள் பிறந்ததாக ஐ.நா-வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் அன்றைய தினத்தில் 67,385 குழந்தைகள் பிறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புத்தாண்டின் முதல் குழந்தை பிஜியிலும், கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு கெடுபிடிகளை அந்நாட்டு அரசு மக்கள் மீது விதித்து வருவதால் குழந்தை பிறப்பு குறைந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.