![Youths of Tamil Nadu lose their live in fireworks accident; 20 lakhs by Karnataka Government](http://image.nakkheeran.in/cdn/farfuture/jhqzzfKW2H2xGKYMZnUxY58UOK-h2lgfE-_ZLuMxf1U/1698682459/sites/default/files/inline-images/a2062.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்(23) நித்திஷ்( 22), ராஜேஷ்(19), தினேஷ்(18) ஆகிய 4 பேர் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடையில் கூலி வேலைக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பலியானார்கள். இந்நிலையில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்காக தலா 5 லட்சம் ரூபாய் என 20 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கியது.
![Youths of Tamil Nadu lose their live in fireworks accident; 20 lakhs by Karnataka Government](http://image.nakkheeran.in/cdn/farfuture/2tTvTRXwj5YHMru3gvitXMsh2jko8vZTRDf4qyriE2k/1698682490/sites/default/files/inline-images/a2061.jpg)
கர்நாடக அரசு வழங்கிய இந்த நிவாரண நிதிக்கான காசோலையை கர்நாடக அரசு வருவாய்த் துறை அலுவலர்கள் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்திற்கு நேரில் வந்து வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் முன்னிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் பெற்றோர்களிடம் தலா 5 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.