நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் மனோகல்லூரி வாளாகத்தில் இடி விழுந்து கட்டிடம் இடிந்து விழுந்து முதலாம் ஆண்டு மகாலெட்சுமி சம்பவ இடத்தில் பலி.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் அக்னி நட்சத்திரம் துவங்கியதில் இருந்து அனல் காற்றுடன் கடும் வெப்பம் அதிகரித்தால் மக்கள் கடும் அவதி பட்ட நிலையில் வானிலை மையம் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் அரை மணி நேரமாக இடி மின்னல் லுடன் கனமழை பெய்தது. இந்த மழையில் சங்கரன்கோவில் திருவேங்கம் செல்லும் சாலையில் உள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியான மனோ கல்லூரி வாளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இடி விழுந்ததில் கட்டிடம் இடிந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் மகாலெட்சுமி (19) பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வரும், மாணவியின் தலையின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இச்சம்பவம் பற்றி தகவலறிந்த தீ யணைப்பு துறையினர், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து பலியான மாணவியின் உடல்லை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.