சேலம் மாவட்டம், மேச்சேரி, மாதநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மரபு வார விழா தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழா தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகித்து தமிழகத்தின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் என்ற புகைப்பட கண்காட்சியைத் திறந்து வைத்து தமிழகத்தின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், பற்றியும் தொன்மையைப் பாதுகாப்போம் என்று விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.பொறுப்பாசிரியர் விஜயகுமார் பாரம்பரிய சின்னங்களின் முக்கியத்துவம், அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஆசிரியை அன்பரசி நினைவுச் சின்னங்களாக கருதப்படக் கூடியது அரசர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற கோவில்கள், கோட்டைகள், குடைவரை கோவில்கள், அடையாள சின்னங்களாக வடிவமைக்க கட்டிடங்கள், இறந்தோர் நினைவுச் சின்னங்கள், நினைவு தூண்கள், கல்லறைகள், நினைவு வளைவுகள் போன்றவை எல்லாம் நம் நாட்டின் வரலாற்றை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடிகள் ஆகும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
விழாவில், சேலம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்கள், தமிழகத்தின் பராம்பரிய வரலாற்று நினைவுச் சின்னங்களின் புகைப்படங்கள் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.