Skip to main content

ஆவின் தொழிற்சாலையில் வேலை பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
A tragedy happened to a woman who worked in a factory in thiruvallur

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து, நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும்  திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பால் உற்பத்தியாகி வெளியே வந்து அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்தி என்பவரது மனைவி உமா ராணி (30) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது முடி இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. இதனால் உமா ராணியின் தலை அந்த மோட்டாரில் சிக்கிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை துண்டாகி பலியானார். 

இது குறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உமா ராணி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், காக்கலூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி உமா மகேஸ்வரி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த ஆறு மாதமாக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காக்களூர் பால் பண்ணையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது. இதனால் ஆவின் பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

சார்ந்த செய்திகள்