Published on 05/05/2022 | Edited on 05/05/2022
திருச்சி மாவட்டம், மணப்பாறை உசிலம்பட்டி கிராமம் ஆசாரி தெருவில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சங்கீதா (29) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் வாடகைக்கு இருக்கும் வீட்டிற்கு அருகில் சுப்பிரமணி (58) என்பவர் புதிய மாடி வீடு கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழை மற்றும் பலமாக காற்று வீசியதால் சுப்பிரமணியன் வீட்டின் சுவர் இடிந்து பக்கத்தில் குடியிருந்து வரும் சங்கீதா வீட்டின்மேல் விழுந்துள்ளது. இதில் சங்கீதா குடியிருக்கும் வீட்டின் சுவர் இடிந்து சங்கீதா மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பிறகு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனா்.