விடிய விடியக் காத்திருந்த அதிகாரிகள் மும்பையிலிருந்து திருநெல்வேலி வரை சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரயில் மூலம் மும்பை உட்பட வடமாநிலங்களில் பிழைப்பதற்காகச் சென்றிருந்த தமிழர்கள், கரோனா பரவல் காரணமாக அங்கிருந்து அவரவர் ஊர்களுக்கு அந்த ரயிலில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்தச் சிறப்பு ரயில் மும்பையிலிருந்து நேற்று இரவு 12 மணி அளவில் விழுப்புரம் வந்து சேர்ந்தது. அந்த ரயிலில் வருகை தந்த விழுப்புரம், சென்னை, தர்மபுரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகை, கோவை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வந்திருந்தனர்.
அப்படி வந்தவர்களில் 650 பேர் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 650 பேர்களையும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் இரவு முழுவதும் விடிய விடிய விழித்திருந்து ரயிலிலிருந்து வந்து இறங்கியவர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ரயிலில் வந்தவர்களிடம் ஊர் பெயர், செல்போன் எண் இவைகளையெல்லாம் சரிபார்த்து சமூக இடைவெளியைப் பயன்படுத்தி அந்தந்த ஊர்களுக்குச் சிறப்பு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.
அப்படிச் செல்லும் அவர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள கரோனா சிறப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு அங்குப் பரிசோதனை செய்த பிறகு நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், நோய்த் தொற்று இருப்பவர்களுக்கு அந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை முடிந்த பிறகு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்னர். அரசின் வழிகாட்டுதல் படி இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.