முதியவரான திவான் பாட்ஷாவிடமிருந்து ரூ.200-ஐ கொள்ளையடித்ததாக, 22 வயது இளைஞரான தினேஷ்குமார் மீது சிவகாசி டவுண் காவல்நிலையத்தில் 392 பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரூ.200-ஐ எப்படி கொள்ளையடித்தார் தினேஷ்குமார்?
ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வெளிவந்த ரவுடி தினேஷ்குமார், சாலையில் நின்றுகொண்டிருந்த திவான் பாட்ஷா வயிற்றில் கத்தியை வைத்து கொலை செய்வதாக மிரட்டி கொள்ளையடித்துள்ளார். இந்த வழக்கில்தான், தற்போது தினேஷ்குமார் கைதாகியுள்ளார். இதுபோலவே அவரது கூட்டாளிகளான ரவுடிகள் சிலரும், சிவகாசி பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்துவருவதாக பொதுமக்களிடமிருந்து சிவகாசி டவுண் காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாம். தொடர்ந்து ரவுடிகள் மீது சட்டம் பாயும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள், சிவகாசி மக்கள்.