Published on 03/10/2020 | Edited on 03/10/2020
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சில தினங்களுக்குமுன் லக்னோ சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி உட்பட 32 பேரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையிலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், ‘பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது’ என போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.