கடந்த 21.05.2019 அன்று 16.30 மணிக்கு புதுச்சேரி சன்முகாபுரத்தை சேர்ந்த பெருமாள்(35) என்பவர் புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பிப்டிக் மெயின் ரோட்டில் கலம்காத்த மாரியம்மன் கோவில் அருகில் நிறுத்தியிருந்த டெம்போ டிராவலர் வண்டியை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டதாக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார். அதன் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுசம்பந்தமாக புதுச்சேரி மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபூர்வகுப்தா உத்தரவின் பேரில் காவல் கண்கானிப்பாளர் (வடக்கு) ஜிந்தா கோதண்ட ராம் மேற்பார்வையில் மேட்டுபாளையம் வட்ட ஆய்வாளர் ஷண்முகசுந்தரம் தலைமையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவலர்கள் குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதையடுத்து அரியாங்குப்பம் நடராசன் மகன் ரமேஷ்(23), செல்வம் மகன் அசோக் (22) தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் காந்திபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் பிரபு(36), உடுமலைப்பேட்டை ஆறுமுகம் மகன் முருகானந்தம்(எ)விமல்(23) ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் ரமேஷ் மற்றும் கூட்டாளிகள் சம்மந்தப்பட்ட டெம்போ டிராவலர் வண்டியையும், புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலைய சரகத்தில் திருட்டு போன டாட்டா ஏஸ் வண்டியையும், தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம், வீரப்பாண்டி காவல் சரகத்தில் திருட்டு போன டாட்டா ஏஸ் வண்டியையும் மற்றும் நம்பர் பிளேட், இஞ்சின் நம்பர், சேஸ் நம்பர் இல்லாத டாட்டா ஏஸ் ஆகிய நான்கு வண்டிகளை வெவ்வேறு இடங்களிலிருந்து திருடியது தெரிய வந்தது.
அவற்றின் மதிப்பு சுமார் ரூபாய் 12 லட்சம் இருக்கும். ரமேஷ் மற்றும் அசோக் ஆகியோர் மீது லாஸ்பேட்டை, தன் வந்திரி நகர் மற்றும் முதலியார்பேட்டை காவல் நிலையங்களில் ஏற்கனவே 6 வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. மேற்படி நபர்களை கைது செய்த போலிசார் அவர்கள் திருடிய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.