யாருக்கும் பயப்பட மாட்டே. நான் தவறான கருத்துகள் எதுவும் சொல்லவில்லை என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
விஷால், சமந்தா, அர்ஜீன் நடித்துள்ள படம் இரும்புத்திரை. மித்ரன் இயக்கியுள்ளார். இப்படம் நேற்று வெளியானது. இதில் ஆதார் கார்டு மூலம் நடைபெறும் மோசாடி சம்பவங்கள், டிஜிட்டல் இந்தியா தொடர்பான விமர்சனங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் நேற்று இரும்புத்திரை ஓடும் தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்தன. இதனால் விஷால் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை காசி தியேட்டரில் படத்தின் இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து விஷால் கூறியதாவது,
சமூகத்தில் நடக்கும் உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் யாருக்கும் எதிரானது அல்ல. யாரையும் எதிர்த்து கருத்து தெரிவிக்கும் படமும் அல்ல. மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைத்தான் படத்தில் கதையாக கூறப்பட்டுள்ளது. நான் எப்போதும் காவல்துறையை மதிப்பவன். சட்டப்படி எல்லாம் நடக்கும் நம்பிக்கை கொண்டவன். படத்துக்கு வரும் எதிர்ப்புகள், போராட்டங்களை காவல்துறையினர் பார்த்துகொள்வார்கள். சமூக அவலங்களைத்தான் நாங்கள் படம் பிடித்துள்ளோம். அதனால் யாருக்கும் பயப்பட மாட்டேன். படத்தில் தவறான கருத்துகள் எதுவும் சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.