
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். களக்காடு அருகே உள்ள மாவடி புத்தூரைச் சேர்ந்த 54 வயதான மோகன் என்பவர் இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஆசிரியர் மோகன் தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி மாணவியும் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது ஆசிரியர் மோகன் அறையில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு அங்கிருந்து வெளியே ஓடிவந்த மாணவி மாலை வீட்டிற்குச் சென்றது நடந்தவற்றைத் தாயிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தின் ஆசிரியர் மோகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.