
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தோப்பு பாளையத்தைச் சேர்ந்தவர் ரகு. இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பேராசிரியர் ரகு ஈரோடு செங்கோடம் பள்ளம் மாருதி நகரில் தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரகுவை பார்த்து தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி .20ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து ரகு கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ரகுவிடம் பணத்தை பறிக்க உடந்தையாக இருந்ததாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த வைஷ்ணவி (வயது 24) என்பவரையும், பணத்தை பறித்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தை சேர்ந்த மெய்யரசன் (23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.