Skip to main content

கட்டிடத் தொழிலாளி மீது கல்லைபோட்டு படுகொலை; ஈரோட்டில் சோகம்!

Published on 17/03/2025 | Edited on 17/03/2025

 

construction worker incident near Erode

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஈங்கூர் சாலையைச் சேர்ந்தவர் கணேசன். கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் கணேசனுக்குத் திருமணமாகி விமலா என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு இருந்த கணேசன் வீட்டிற்கு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். அவரது உறவினர்கல் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கணேசன் கிடைக்க வில்லை. இந்த நிலையில் இன்று காலையில் சென்னிமலை வாரச்சந்தை திடலில் கணேசன் தலையில் கல்லை போட்டு மர்மான முறையில் இறந்து கிடந்த உள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றியும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை கைப்பற்றி வருகின்றனர்.

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து உள்ளதா? என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்ட மேஸ்திரி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்