![tamilnadu health secretary press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/YJ9hPUNoF-RMAZ_L-XyM7xqU84ICvxmsBB-bQeFWhhI/1594455375/sites/default/files/inline-images/radha%20krishan%2044.jpg)
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கவில்லை எனத் தவறான கருத்துகள் பரவி வருகின்றன. தமிழகத்தில் இந்திய மருத்துவ முறைகளைக் கொண்டு அதிக சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக சித்த மருத்துவமனைகளும் அமைக்கப்படுகிறது. சித்த மருத்துவம் சார்ந்த மருந்துகளும் போதிய அளவில் இருப்பு உள்ளது. விரும்பும் நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேத சிகிச்சை தரப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி வீட்டு வசதி கட்டடத்தில் 5,000 படுக்கை வசதி ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை அல்லாத பகுதிகளிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. சென்னையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் கரோனாவைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது." என்றார்.