Published on 22/04/2020 | Edited on 22/04/2020
கரோனாவால் இறந்த மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்திக்கு தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார் தமிழக முதல்வர் பழனிசாமி.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று சுமார் 12:30 மணியளவில் கரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் துணைவியார் ஆனந்தி சைமனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
![tamilnadu cm palanisamy conversation](http://image.nakkheeran.in/cdn/farfuture/DQJWpIBWmZhaFS1z3wkxuFrwma7_mqwru4uJ5JVQzzw/1587548576/sites/default/files/inline-images/cm8999.jpg)
இதனிடையே ஆனந்தி சைமன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கீழ்ப்பாக்கம் கல்லறையில் தனது கணவரின் உடலை மறு அடக்கம் செய்ய கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.