![கர](http://image.nakkheeran.in/cdn/farfuture/J0673BgivreHChZf5RfZeaPUw3vjF8u3RUy0N_aHFAM/1669037773/sites/default/files/inline-images/kl%3B_4.jpg)
இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தொடர்ந்து ஐந்து சதங்களை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். அருணாச்சலப்பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐந்தாவது சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார். இந்தத் தொடரில் தொடர்ந்து ஐந்தாவது சதமடித்த ஜெகதீசன் 114 பந்துகளில் தனது இரட்டைசதத்தைக் கடந்து மற்றொரு வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்துள்ளார்.
தமிழக அணி 50 ஓவர் முடிவில் 506 ரன்கள் குவித்தது. பின்னர் ஆட்டத்தை துவங்கிய அருணாச்சலப்பிரதேச அணி 71 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 435 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சங்ககரா, இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக நான்கு சதங்களை மட்டுமே அடித்திருந்தனர். இந்த சாதனையை தற்போது ஜெகதீசன் முறியடித்துள்ளார்.