Published on 08/01/2021 | Edited on 08/01/2021
![salem to chennai 8 roads supreme court](http://image.nakkheeran.in/cdn/farfuture/k9NtoRUW97VnAq_8hS5hWh8EcvhLK_0twu2nFz7cmDY/1610086923/sites/default/files/inline-images/supreme%20court44.jpg)
சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை அனுமதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஏற்கெனவே சென்னை - சேலம் இடையே உள்ள மூன்று நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்யலாம். புதிதாக விலை கொடுத்து நிலம் கையகப்படுத்த தேவையில்லை, புதிய திட்டம் தேவையில்லை. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை அனுமதித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்' என கோரியுள்ளார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.