Skip to main content

’’தமிழன்னு சொல்வதெல்லாம் வேஸ்ட்; தெலுங்கன் இல்லாம மந்திரி சபை அமைக்க முடியாது’’ - கொக்கரிக்கும் ராதாரவி

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

 

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

 

 தமிழக -தெலுங்கு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் எம்.ராதாவின் மகன் எம்.ஆர்.ராதாரவி பேசியபோது,  ‘’நான் தெலுங்குகாரன். என் இனம் தெலுங்கு இனம்.  திராவிடம் என்று எடுத்துக்கொண்டால் நான் திராவிடத்தெலுங்கன்.   இளைஞர்களே...’நான் தெலுங்கன்’ என்ற பெருமையுடன் இருங்கள்.  அதில், தவறே கிடையாது. நாம் யார் வம்புக்கும் போகமாட்டோம்.   ஆனால், நாம் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது.

  

r

 

தமிழன்னு சொல்லுவதெல்லாம் வேஸ்ட்.  என் தெலுங்கு இனம்தானே 40வது ஆண்டுக்கு விழா எடுக்கிறது.   தமிழர்கள் எம்.ஆர்.ராதாவை மறந்துவிட்டார்கள். 

 

தமிழ்நாட்டில் மந்திரிசபை அமைப்பதில் தெலுங்கு இனம்தான் தூணாக இருக்கிறது.  தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் மந்திரி சபை அமைக்க முடியாது.  தேனியில் இருந்து திண்டுக்கல் வரை தெலுங்கர்கள்தான் தேர்தலில் நிற்கிறார்கள்.   விருதுநகர், சிவகாரி, சாத்தூரில் தெலுங்கர்தான் அதிகமாக இருக்கிறார்கள்.   தெலுங்கர்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்.   நம்முடைய இனத்திற்கு யார் ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற முடியும். இதற்கு சான்றுகள் உள்ளன.   

 

அரசியலில் மட்டுமல்ல, தெலுங்கர்கள்தான் கோயம்புத்தூரில் பல மில்களுக்கு அதிபர்களாக இருக்கிறார்கள். சினிமாவிலும்  அதிகம்பேர் தெலுங்கர்தான்.   வாய்ப்பு போய்விடும் என்று அவர்கள் எல்லோரும் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்.  

 

மற்றவர்களுக்காக கத்தியதுபோதும்.  இனி நமக்காக, நம் இனத்துக்காக கத்துவோம்’’என்று தெரிவித்தார்.   


 

சார்ந்த செய்திகள்