Published on 11/06/2022 | Edited on 11/06/2022
கோயிலில் அமைச்சர்கள் தேரை இழுக்க எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்த பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை குமாரசாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா, கடந்த ஜூன் மாதம் 3- ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, அமைச்சர்கள் தேரை இழுக்க, அங்கிருந்த பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வினர், வாக்குவாதம் செய்ததால், பா.ஜ.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உட்பட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.