Skip to main content

 ’சோனியாவுக்கு ரஃபேல் புரோக்கர் நெருக்கம்’ - போட்டுத்தாக்கும் மோடி

Published on 10/01/2019 | Edited on 10/01/2019
narendra modi



தமிழகத்தின் தொகுதிப் பொருப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார் பிரதமர் மோடி. 

 

அப்போது நிர்வாகிகள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். பாஜக மற்றும் மோடியின் இமேஜை கேள்விக்குள்ளாக்கியிருக்கும் ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. 

 

sonia-rahul



அப்போது, "பொருளாதார நிர்வாக திறன் இல்லாததும், ஊழல்களும்தான் கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என அனைவரும் கருதுகிறார்கள். ஆனால், அதையும் தாண்டி சில முக்கிய காரணங்களும் இருக்கின்றன. தேசத்தின் பாதுகாப்புத்துறையை பல ஆண்டுகளாக புரோக்கர்களின் கூடாரமாக மாற்றி வைத்திருந்தது காங்கிரஸ். 


பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் எப்போது நடக்கும் என்பதை கூட, ரஃபேல்  இடைத்தரகரான ( புரோக்கர் ) மைக்கேல் தெரிந்து வைத்துள்ளார். அரசு ஆவணங்கள் தொடர்பான பல விபரங்கள் கூட தெரிந்து வைத்துள்ளார். ரஃபேல் ஒப்பந்தத்தை 10 ஆண்டுகள்  தாமதப்படுத்தி உள்ளார் மைக்கேல்.  அப்படியெனில்,  நாட்டின் பாதுகாப்பை ஆபத்தாக்கும் எத்தகைய பங்களிப்பு அவருக்கு இருந்துள்ளது என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த இடைத்தரகர் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார் பிரதமர் மோடி.

 

 

 


 

சார்ந்த செய்திகள்