
திருச்சி மாவட்ட மஹல்லா ஜமாஅத் பேரவை செயற்குழு கூட்டம் திருச்சி தென்னுர் ஹைரோடு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட மஹல்லா ஜமாஅத் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக அவசர கோலத்தில் பாராளுமன்ற இரு அவைகளிலும் வக்ப் திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ள ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து பாராளுமன்ற இரு அவைகளிலும் குரல் கொடுத்த அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தும் திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுக்காவிலும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .நிறைவாக மஹல்லா ஜமாஅத் பேரவை நிர்வாகி நன்றி கூறினார்.