தமிழகத்தில் நிலவும் குடிதண்ணீர் பஞ்சம் காவிரி பாயும் தஞ்சையையும் விட்டு வைக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் உறவும் நட்பும் கூட விரோதிகள் ஆகிறார்கள். காரணம் காவிரி முதல் கொள்ளிடம் வரை அத்தனை ஆறுகளிலும் 20 அடி உயரத்திற்கு இருந்த மணலை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் களவாட விட்டதுடன் நகரை சுற்றி வியாபாரத்திற்காக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கவும் வாய்மொழி அனுமதி கொடுத்து மாத மாமூல் பெற்றது தான்.
நாளுக்கு நாள் வெயிலும் அதிகரிக்க தண்ணீர் பஞ்சமும் அதிகரித்தது. இதனால் காலிக்குடங்களுடன் நீரைத் தேடி ஓடுகிறார்கள் மக்கள். இந்த நிலையில் தான் தஞ்சை விளார் வடக்கு பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு தினசரி வாட்ஸ் அப் மூலம் முக்கிய செய்திகளை வாசிப்பதுடன் கிராமத்தின் பிரச்சனைகளிலும் தலையிட்டு தீர்த்து வைப்பார். தண்ணீரால் பிரச்சனை வக்கூடாது என்பதால் தானே தண்ணீர் திறந்து விடுவார். குடிதண்ணீர் வரவில்லை என்றால் மக்களோடு சென்று அதிகாரிகளை பார்ப்பார். அதன் பிறகும் ஆகவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராடுவார்.
அப்படித்தான் கடந்த வாரம் விளார் பகுதியில் ஒரு பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பதால் அதிகாரிகளை பார்த்தும் பயனில்லை என்பதால் மக்களோடு இணைந்து போராடி லாரியில் தண்ணீர் கொண்டுவர வைத்தார். அந்த லாரித் தண்ணீரில் தனக்கான எமனும் வந்தது தெரியவில்லை அவருக்கு.
எந்தப் பிரச்சனையானாலும் முன்னே வந்து நிக்கும் ஆனந்து தம்பிய இப்படி ஒரு குடம் தண்ணி பழிவாங்கிவிட்டதே.. இனி எங்க பிரச்சனையை யார் எடுத்துச் செல்வார் என்று கண்ணீர் வடிக்கின்றனர் விளார் வடக்கு பகுதி மக்கள்.
நீட் அரக்கனுக்கு மாணவிகள் பலியாவது போல குடிதண்ணீர் பஞ்சத்துக்கு துடிப்பான இஞைர்கள் பலியாகத் தொடங்கிவிட்டது.