![e](http://image.nakkheeran.in/cdn/farfuture/iLf-ncOzx1E4Jz8_KeF5yet4wLqqDz9S11FtKQjm1-Q/1535240184/sites/default/files/inline-images/eswaran1_0.jpg)
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் காவிரி மற்றும் திருமணிமுத்தாற்றை இணைக்க கோரி நடைபயணம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் மலைப் பகுதியில் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டம் வரை செல்கிறது திருமணிமுத்தாறு. இந்த ஆற்றுடன் காவிரி ஆற்றை இணைத்தால் வறண்ட பகுதியாக உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறும் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையும் தீரும் என்பதை வலியுறுத்தி இன்று கொ.ம.தே.க. கட்சி சார்பில் நடைபயண இயக்கம் நடைபெற்றது.
![es](http://image.nakkheeran.in/cdn/farfuture/HMSp8ptVsUfq262hZQRHSS9XNErMNU4mmJuVWtAiaYM/1535240218/sites/default/files/inline-images/eswaran%202.jpg)
இந்த நடை பயணத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் E .R .ஈஸ்வரன் தலைமை தாங்கி நடந்தார். இதில் சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் தொடங்கி திருச்செங்கோடு திருமணிமுத்தாறு கரையோரம் வரை வந்து நடை பயணம் நிறைவு பெற்றது. காவிரி ஆற்றை திருமணிமுத்தாறுடன் இணைக்க ஆளும் எடப்பாடி அரசு முன் முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் இதற்கு கொங்கு மண்டல அ.தி.மு. க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார் ஈஸ்வரன்.