Skip to main content

ஜெயகோபால் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஜெயகோபால் மற்றும் மேகநாதன் உள்ளிட்ட இருவரை காவல்துறை கைது செய்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு, உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (10/10/2019) விசாரணைக்கு வந்தது. 

CHENNAI FLEX BANNER INCIDENT HIGH COURT BAIL INVESTIGATION POSTPONED



மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயகோபால் மற்றும் மேகநாதன் இருவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க கோரியதால், கோரிக்கையை ஏற்ற நீதிபதி இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்துள்ளார். 
 

CHENNAI FLEX BANNER INCIDENT HIGH COURT BAIL INVESTIGATION POSTPONED




 

சார்ந்த செய்திகள்