Skip to main content

நாதக வேட்பாளர் அப்செட்; வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய அபிநயா

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
ntk candidate Abinaya leaves the counting center worried

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 69,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 30,421 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 5,566 வாக்குகளும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தேர்தலில் பின்னடைவை சந்தித்ததன் காரணமாக அப்செட்டான நாதக வேட்பாளர் அபிநயா வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 

சார்ந்த செய்திகள்