உலக கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய மற்றும் அண்டை நாடுகள் பங்கேற்ற தடகளப் போட்டிகளில் நடத்தப்பட்டன. இதில் 14 வந்தோர்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் 8 பேர் பங்கேற்று வெற்றி பெற்று அண்டை நாடுகள் பங்கேற்கும் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வு செய்யபட்டனர்.
இந்நிலையில் நேபாளம், வங்கதேசம், பூட்டான், இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டி நேபாளம் காத்மாண்டில் நடந்தது. இதில் இந்திய அணி பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா வீரர்கள் அரையிறுதி போட்டியில் நேபாளத்துடன் மோதி 42.60 என்ற பேஸ்கட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் பூட்டான் நாட்டின் உடன் மோதினர்.
பரபரப்பான போட்டியில் 40, 50 என்ற பேஸ்கட் கணக்கில் வீழ்த்தி கோப்பையை மற்றும் பதக்கம் பெற்றனர். கடும் உறைபனியை பொருட்படுத்தாமல் இந்திய வெற்றிக்காக விளையாடிய வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் சேவியர், முதல்வர் ரெக்ஸ்பீட்டர், உடற்கல்வி ஆசிரியர்கள் வெண்மணி, ஷாம், முத்துப்பாண்டி இலக்கியா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினார்கள்.