Skip to main content

திரளான பக்தர்கள் வடம் பிடிக்க அசைந்தாடி வந்த ஆடித்தேர்!

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

ஆதிசிவன் ஒரு பாகமும், மறு பாகம் ஹரியாகவும் ஒருசேர அவதாரமெடுத்து சைவமும் விஷ்ணுவும் ஒன்றே என்று உலகுக்கு உணர்த்தி, ஒற்றுமையை ஏற்படுத்திய சிவபெருமான், அன்னை உமையவள் ஸ்ரீகோமதியம்பிகைக்கு அவரின் அருந்தவப்படி அத்திருக்காட்சியைக் காட்டியருளிய பூமி புன்னைவனம் என்கிற பொதிகையடி. இந்த அரிய தபசுக்காட்சி நடந்த இடமே தற்போது நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராகியது. தென் மாவட்டத்தின் சங்கரநாராயணர், ஸ்ரீகோமதியம்பிகைக்காக பாண்டிய மன்னர், உக்கிரபாண்டிய மன்னரால் மிகப்பெரிய ஆலயம் சங்கரன்கோவிலில் அமைக்கப்பட்டதாக வரலாறு.

 

 

nellai district sankarankovil temple festival ther peoples police collector

 

ஆடி மாதத்தில் ஆதிக் கடவுள் சிவபெருமானின் இந்த அரிய காட்சி நடந்ததால், சங்கரன்கோவிலில் ஆடித்தபசு என்று அழைக்கப்பட்டு பத்து நாட்கள் திருவிழாவாக மண்டகப்படிதாரர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அக்காட்சியைக்காண லட்சக்கணக்கான மக்கள் திரள, வரும் 13ம் தேதி ஆடித்தபசுக் காட்சி நடக்க உள்ளது. அதன் முன்னோட்டமாக, 9ம் திருநாளான இன்று ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீகோமதியம்பிகையின் திருத்தேரோட்டம் காலையில் நடந்தது. பக்திப்பரவசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பித்து இழுக்க, அசைந்தாடியபடி வந்தது ஆடித்தேர்.

 

nellai district sankarankovil temple festival ther peoples police collector

 

தேர் வடம் பிடிக்கும் மக்களோடு மக்களாகக் கலந்து, ஆரம்ப கட்டம் முதல், தேர் நிலையம் வந்து சேரும் வரை, தேரை வடம் பிடித்து இழுத்து வந்தார் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான அருண்சக்திகுமார். தேரோட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டக் கலெக்டர் ஷில்பாவும் தேரை வடம் பிடித்து இழுத்தார்.




 

சார்ந்த செய்திகள்